189
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் இன்று 21ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வறுமைக் கோட்டுக்கு உள்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கிவைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் இராணுவக் கட்டளைத் தளபதியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வித்தியாவின் தாயார் சிவலோகநாதன் சரஸ்வதி பங்கேற்று மாணவர்களுக்கு உதவிப்பொருள்களை வழங்கிவைத்தார். இந்த நிகழ்வு இன்று காலை புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
Spread the love