சிரியா உள்நாட்டுப் போருக்கு தீர்வு காண்பது தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது. சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு ஜனாதிபதி ஆசாத்துக்கு ரஷ்யாவும் எதிர்க்கட்சிகளுக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்து வருகின்றன.
இந்த நிலையில் யில் ஐ.நா. சபை ஏற்பாட்டின்பேரில் சிரியா உள்நாட்டுப் போருக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஜெனீவாவில் இன்று அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி ஆசாத் தரப்பு குழுவும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த குழுக்களும் பங்கேற்கின்றன. ஆசாத் பதவியை விட்டு விலகி பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என ஐ.நா. சபை வலியுறுத்தி வருகின்ற நிலையில் இப்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடத்த முடியாது என ஆசாத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.