குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்தில் நன்னீர் மீன் உற்பத்தியினை அதிகரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக ஏற்பட்ட வரட்சி காரணமாக குளங்களின் நீர் மட்டம் அடிநிலையினைச் சென்றடைந்ததன் காரணமாக நன்னீர் மீன் பெருக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல குளங்களில் நன்னீர் மீன் முழுமையாக அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றது. தற்போது மழை வீழ்ச்சி இடம் பெற்று குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வரும்நிலையில் குளங்களில் மீன்குஞ்சுகளை உற்பத்திக்காக விடுவதனால் எதிர்காலத்தில் நன்னீர் மீன்பிடி வளர்ச்சி அடையும். அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நன்னீர் மீன்பிடியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்திலே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நன்னீர் மீன்பிடியினை நம்பியே தங்களின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றனர். முக்கியமாக இரணைமடு, புதுமுறிப்பு, வன்னேரிக்குளம், கல்மடு, அக்கராயன்குளம், பிரந்தனாறு, கரியாலைநாகபடுவான் போன்ற பாரிய குளங்களிலும், மாவட்டத்தில் உள்ள ஏனனைய சிறு குளங்களிலும் நன்னீர் மீன்பிடி இடம்பெற்று வருகிறது.