Home உலகம் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி பெண்களிடம் மன்னிப்பு கேட்டார்..

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி பெண்களிடம் மன்னிப்பு கேட்டார்..

by admin

படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆப்கானிஸ்தானில் பாரம்பரிய முறைப்படி, பெண்கள் தலையில் அணிந்துவரும் துணி குறித்து பேசிய கருத்திற்காக, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி மன்னிப்புக்  கோரியுள்ளார். அரச அதிகாரிகளுக்கு, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவுடன் தொடர்புள்ளது எனக்  தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு    பதிலளித்த ஜனாதிபதி, இவ்வாறு கூறுபவர்கள் ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் அல்லது பெண்களின் தலையில் அணியும் துணியையே அணிய வேண்டும் எனத் தெரிவித்திருந்த கருத்தானது பாலின ரீதியிலானது என சர்ச்சையை கிளப்பியிருந்தது.

அந்த வகையில்  இந்த கருத்தால் வருத்தமடைந்த பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ஜனாதிபதி, தனது வார்த்தைகள் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி  மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி பெண் உரிமைக்காக குரல்கொடுப்பதோடு, ஆப்கானில்   பெண்களுக்கான இடத்தை பாதுகாக்கவும், உறுதியாக்கவும் பணியாற்றி வருபவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி,  சாடர் என்று பயன்படுத்திய வார்த்தைக்கு, ஆங்கிலத்தில் தலையில் அணியும் துணி என பொருள்படுவது தான் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது எனவும  நாட்டின் மிகமுக்கிய இடத்தில் உள்ள மகளிரை புண்படுத்துவதற்கு கூறயவையல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜனாதிபதியின் வார்த்தைகளுக்கு பதிலளித்துள்ள் பிரீ வுமன் ரைட்டர்ஸ் என்ற குழு,  பெண் எழுத்தாளர்களுக்கு ஆதரவளிக்கும் எனவும்  பெண்களை அவமானமாக ஜனாதிபதியே நினைக்கும்போது, ஆப்கானிஸ்தான் பெண்களின் நம்பிக்கையாக யாரை பார்க்கமுடியும் என கேள்வி எழுப்பியுள்ளது.

அந்நாட்டின் பெண் பாராளுமன்ற உறுப்பினரான ஃபௌசியா கூஃபி,  தலையில் துணியை அணிவதில் பெருமைகொள்வதாகஹ டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More