ஒக்கி புயல் காரணமாக திசைமாறி லட்சத்தீவு சென்ற 45 மீனவர்கள் மீட்கப்பட்டு, இன்று காலை கொச்சி துறைமுகம் சென்றடைந்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் சொந்த ஊர் திரும்புவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30ம்திகதி; கன்னியாகுமரி கடல் அருகே மையம் கொண்டிருந்த ஒக்கி புயல 70 கி.மீட்டர் வேகத்தில் வீசியதால் ஆழ்கடலில் மீன்பிடித்த ஆயிரக்காணக்கான மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் திசைமாறி லட்சத்தீவு, மகாராஷ்டிரா போன்ற இடங்களுக்கு சென்றனர்.
இந்தநிலையில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 45 மீனவர்கள் லட்சத்தீவு கவரொட்டி பகுதியில் மீட்கப்பட்ட றிலையில் அவர்கள் நேற்று அங்கிருந்து புறப்பட்டு இன்று காலை கொச்சி துறைமுகத்தை வந்தடைந்துள்ளனர். கரை சேர்ந்த மீனவர்கள் அவர்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.