குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்மானி அறிவித்தல் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். புகையிரத பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் காரணத்தினால் ஜனாதிபதி அண்மையில், புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்திருந்தார்.
அரசாங்கம் தொழிற்சங்கப் போராட்டங்களை தடுத்து நிறுத்த முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் தனது தோல்விகளை மூடி மறைப்பதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்களை பலவந்தமான அடிப்படையில் அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சித்தால் அதனை எதிர்க்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.