குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழ்.மாநகர சபை தேர்தலில் போட்டியிட விருப்பம் கொண்டு தனக்கு ஆசனம் வழங்குமாறு ஊடகவியலாளரான என். வித்தியாதரன் கேட்டது உண்மை தான் என தமிழரசு கட்சியின் இணை செயலாளரும் , வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் , யாழ்.மாநகர சபை மாத்திரமல்ல எந்த உள்ளூராட்சி சபைகளும் முதன்மை வேட்பாளர் , என யாரையும் இதுவரை தீர்மானிக்கவில்லை. அந்த நிலையிலமையில் தனக்கும் மாநகர சபை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என என்.வித்தியாதரன் கோரி இருந்தார். அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை. என தெரிவித்தார். அதன் போது முன்னாள் மாகாண சபை உறுப்பினரான இமானுவேல் ஆர்னோல்ட் மாநகர சபை முதல்வர் வேட்பாளரா என ஊடகவியலாளர்கள் கேட்ட போது ,
இன்னமும் அது முடிவு செய்யவில்லை. ஆர்னோல்ட் மாநகர சபை வேட்பாளர். அவர் மாகாண சபை உறுப்பினராக இருந்து பதவி விலகுகிறேன் என என்னிடம் கடிதம் கையளிக்கும் போதும் , தான் மாநகர சபை வேட்பாளராக போட்டியிட உள்ளதால் தான் வடமாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து பதவி விலகுகிறேன் என தான் கடிதம் தந்துள்ளார். இதுவரைக்கும் எந்த சபைக்கும் முதன்மை வேட்பாளர் என யாரையும் பிரேரிக்க வில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே அது தொடர்பில் கட்சி தீர்மானிக்கும் என தெரிவித்தார்.