ஆப்ரிக்க நாடான சிம்பாப்வேவின் துணை ஜனாதிபதியாக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் கான்ஸ்டான்டினோ சிவேங்கா இன்று பதவியேற்றுள்ளார்.
பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற சிம்பாவே, சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ரொபர்ட் முகாபேயை 93 வயது வரை தலைமைப்பதவியில் வைத்திருந்தது. 1980-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ரொபர்ட் முகாபேயின் 37 ஆண்டுகால ஆட்சியை, அந்நாட்டின் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, ரத்தம் சிந்தாத ராணுவ புரட்சி மூலம் முடிவுக்கு கொண்டுவந்தார்.
இதனையடுத்து முகாபேயால் நீக்கப்பட்ட முன்னாள் துணை ஜனாதிபதி எம்மர்சன் நாங்காவா, அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார். இந்நிலையில், முகாபேவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் கான்ஸ்டான்டினோ சிவேங்கா, தனது இராணுவத்தளபதி நிலையை ராஜினாமாச் செய்து சிம்பாப்வேயின் துணைத் தலைமையை ஏற்கத் தயாரானார். அதற்கமைவாக புதிய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இன்று முறைப்படி பதவியேற்றார்.