164
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று ரிக்டர் அளவில் 4.7 புள்ளிகள் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று மாலை 4:47 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. கடந்த 11-ம் திகதியும் இதே பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love