சினிமா

தன்னைத் தானே இயக்கவுள்ள நடிகர் தனுஷ்


நடிகர் தனுஷ், தனது அடுத்த படத்தை தானே இயக்கி, முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார் வட சென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய பட்ங்களில் இப்பொழுது நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இந்த இரு படங்களையும் முடித்த பின்னர் பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி-2 படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான படப்பிடிப்பு எதிர்வருத் ஜனவரி நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே நடிகர் தனுஷ் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தனுஷ் இயக்கவுள்ள அவரது அடுத்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் 37-வது படமாக உருவாகவுள்ள இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து வெற்றி பெற்று வரும் தனுஷ், கடந்த வருடம் பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply