காமராஜ் படத்தை தொடர்ந்து எம்.ஜி.ஆர் திரைப்படத்தினை இயக்குனர் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். 1967ல் எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தை வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆராக சதீசும் எம்.ஆர்.ராதாவாக பாலாசிங்கும் நடித்துள்ள அதேவேளை ஒய்.ஜி.மகேந்திரன், ரித்விகா, மலையாள நடிகர் ரகு மற்றும் வையாபுரி ஆகியோரும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப்படத்தில் வரும் அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா, எம்.என்.நம்பியார் வேடங்களில் நடிப்பவர்களுக்கான தேர்வு இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களை, உள்ளது உள்ளபடியே படமாக்கி வருகிறோம் எனவும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை பெரியார் படத்துக்கு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி அரசு சார்பில் நிதியுதவி வழங்கியதைப் போல் எம்.ஜி.ஆர் படத்துக்கு அரசிடம் நிதியுதவி கோரியுள்ளதாகவும் படத்தின் டீசரை பிரதமர் மோடியை வெளியிட கேட்டுள்ளதாகவும் இயக்குனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.