சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென பெபரல் அமைப்பு காவல்துறை மா அதிபரிடம் கோரியுள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில்நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். பெபரல் அமைப்பின் உறுப்பினர்கள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை இன்றைய தினம் காவல்துறைத் திணைக்கள தலைமையகத்தில் சந்தித்துள்ளனர். தேர்தல் சட்டங்களை மீறிய அரசியல் கட்சிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளனர். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரேனும் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்துமாறும் கோரியுள்ளனர்.