இந்தியாவின் காஷ்மீர் மாநிலாத்தின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் வேறு விதமாக பதிலடி மேற்கொள்ளப்படும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஷ்மீரில் ஆயுததாரிகளுக்கு ஆதரவு தரும் விதமாக பாதுகாப்பு படையினர் மீது இளைஞர்கள் தினமும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த கல்வீச்சில் 22 வயது ராஜேந்திர சிங் என்னும் படை வீரர் ப உயிர் இழந்திருந்தார். . இதையடுத்து ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இப்படி கல்வீசி தாக்குதல் நடத்துவதால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. இதுபோல் தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்வீச்சில் ஈடுபடுவோர் மீது இராணுவம் வழக்கும் பதிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்) நிறுத்திக்கொள்ளவேண்டும். 1971ஆம் ஆண்டு நம்மிடம் போரில் தோற்றதன் காரணமாக நமது அண்டை நாடு தொடர்ந்து பனிப்போரில் ஈடுபட்டு வருகிறது. சட்ட ரீதியாக காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம். அதை யாரும் எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம். காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவலை பாகிஸ்தான் ஆதரிக்கிறது. அதை நாமும் முறியடிக்கிறோம். அதேநேரம் பாகிஸ்தான் தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வந்தால் வேறு விதமான பதிலடி தரவேண்டியது வரும். என்று அவர் குறிப்பிட்டார்.