போர்முலா வன் கார்பந்தயப் போட்டியில் மெர்சிடிஸ் அணிக்காக விளையாடும் நடப்பு சம்பியனான இங்கிலாந்தின் லுயிஸ் ஹமில்டன் ( Lewis Hamilton) 5வது முறையாக சம்பியன் பட்டத்தினை கைப்பற்றியுள்ளார். இந்த ஆண்டுக்கான போர்முலா வன் கார்பந்தயப் போட்டி உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடைபெற்று வருகின்ற நிலையில் மெக்சிகோ சிட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 19-வது சுற்றான மெக்சிகோ கிராண்ட்பிரி போட்டியில்; நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் முதலிடத்தினை பெற்றிருந்தார்.
ஹாமில்டன் 4-வது இடம் பிடித்து 12 புள்ளிகள் பெற்றார். இந்த போட்டியில் 7-வது இடத்துக்குள் வந்தாலே சம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நிலையில் ஹாமில்டன் 4-வது இடத்தை பிடித்ததன் மூலம் மீண்டும் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
இன்னும பிரேசில் கிராண்ட்பிரி , அபுதாபி கிராண்ட்பிரி ஆகிய 2 சுற்று போட்டிகள் மேலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது