130
இலங்கையின் ஆட்சியாளரை சம்பிரதாயப்பூர்வமாகவும் சட்ட வரைவுக்கு அமைவாகவுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உதவி ஊடகப் பேச்சாளரான ரொபர்ட் பெல்லடினோ குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி உடனடியாக சபாநாயகருடன் கலந்துரையாடி ஆலோசனைகளைப் பெற்று செயற்பட வேண்டும் எனவும் ரொபர்ட் பெல்லடினோ வலியுறுத்தியுள்ளார். நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து சகலவற்றையும் தீர்மானிக்க வேண்டுமே தவிர எவரையும் அச்சுறுத்தியல்ல எனவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love