Home இந்தியாகர்நாடகத்தில் இடைத்தேர்தல்…

கர்நாடகத்தில் இடைத்தேர்தல்…

by admin

கர்நாடகம் மாநிலத்தின் சிமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இந்த தொகுதிகளில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் உள்ளது.
பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் போட்டியிடுகின்றனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த ஐந்து தொகுதிகளில் மொத்தம் 54 லட்சத்து 54 ஆயிரத்து 275 வாக்காளர்கள் உள்ளனர். இந்தநிலையில் சில வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாகக் கருதப்பட்டு, காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6-ம் திகதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More