அமைச்சர்களை தொடர்ச்சியாக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று இரவு நாடாளுமன்றைக் கலைக்க உள்ளார் என ஐக்கியதேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், யாப்பு ரீதியான பிரதமர் என தன்னை அழைக்கும் றணில் விக்கிரம சிங்க அரசாங்கத்தின்பிரதி அமைச்சருமான ஹர்ஸா டி சில்வா தனது ருவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் எதிர்வரும் தேர்தலில் அரச அதிகாரத்தை பிரயோகிக்க ஜனாதிபதி திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ள ஹர்ஸா டி சில்வா, பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஜனநாயகம் என்ற சொல்லை இலங்கை உத்தியோகபூர்வமாக நீக்கிக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாததிபதி இவ்வாறானதொரு நடவடிக்கையை எடுக்க மாட்டார் என நம்புகிறேன். காரணம் நாடாளுமன்றைக் கலைப்பதற்கு 150 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனை 19 ஆவது திருத்தச் சட்டம் தெளிவாக கூறுகிறது. எனக் குறிப்பிட்டுள்ளார்.