குஜராத் கலவரம் தொடர்பாக நரேந்திர மோடியை விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மீதான வழக்கு 19-ந் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுகுடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா புகையிரதம் எரிக்கப்பட்டதில் கரசேவகர்கள் பலர் இறந்ததனையடுத்து இதை கண்டித்து மாநிலம் முழுவதும் வெடித்த கலவரத்தில் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர்.
இதன்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு நரேந்திர மோடிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்து 2012-ம் ஆண்டு கலவர வழக்கில் இருந்து அவரை விடுவித்தது.
இதனையடுத்து இந்த கலவரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மனைவி சிறப்பு புலனாய்வு குழுவின் முடிவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றில் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கட்ட நிலையில் அவர் உச்சநீதிமன்றில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார். இதனையடுத்து இந்த வழக்கு 19ம் திகதி விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது