162
ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் முதல் முடக்கப்பட்டுள்ள ஐ.தே.க வின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தை பார்வையிடக் கூடியதாகவுள்ள போதிலும் முகநூலில் புதிய தகவல்களை உட்சேர்க்க முகநூல் நிர்வாகிகளால் முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இச் செயற்பாடானது ஐ.தே.க. வின் இன்றைய ஆர்ப்பாட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்புக்கள் தொடர்பான நேரடி ஒளிபரப்புக்களை வழங்குவதில் சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளதாகவும் ஐ.தே.க. தெரிவித்துள்ளது.
Spread the love