ஊடகவியலாளர் ஜமால் கசாக்கியின் கொலைக்கும் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பில்லை என சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
கசோக்கியை கொல்வதற்கு தங்களது உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரே உத்தரவிட்டதாகவும், இந்த சம்பவத்திற்கும் இளவரசருக்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்தான்புல்லில் உள்ள சவூதி அரேபியாவின் தூதரகத்தில் ஒக்டோபர் 2ஆம் திகதி கசோக்கிக்கு மரணம் ஏற்படுத்தக்கூடிய ஊசி செலுத்தப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் அந்நாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருபவரும் வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமான 59 வயதான ஜமால் கசோக்கி என்பவர் அண்மையில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்துக்கு சென்றநிலையில் கொல்லப்பட்டிருந்தார்
இந்தக் கொலை தொடர்பாக 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், அதில் ஐந்து பேருக்கு மரண தண்டனை வழங்குவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது