செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தினால், யாழ்.மாநகர சபைக்கு 500 மில்லியன் ரூபாய் வருமானம்..
யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான கடைகளின் உரிமையாளர்கள் சபைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தினால் சபைக்கு 500 மில்லியன் ரூபாய் வருமானம் வரும் என யாழ்.மாநகர சபை முதல்வர் இ. ஆர்னோல்ட் தெரிவித்து உள்ளார். யாழ்.மாநகர சபையின் மாதாந்த கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்ற போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான 199 கடைகளுக்கு உரிய கட்டணங்கள் கடந்த 20 வருட காலமாக சபைக்கு செலுத்தப்படவில்லை. அவற்றை ஒரே தடவையில் கடை உரிமையாளர்கள் வழங்கினால் , சபைக்கு 500 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கும். என தெரிவித்தார்.
அதன் போது சில உறுப்பினர்கள் கடந்த 20 வருட நிலுவை கட்டணத்தையும் ஒரே தடவையில் கட்ட கட்டாயப்படுத்தினால், சிறு தொழில் செய்வோர் பாதிக்கப்படுவார்கள். என தெரிவித்தனர்.
அதனை அடுத்து கட்ட வேண்டிய கட்டணத்தின் 50 வீதத்தினை அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முதலும் மிகுதியை 25 வீதத்தினை ஜீன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னரும் 25 வீதத்தினை செப்டெம்பர் மாத 30ஆம் திகதிக்கு முன்னரும் செலுத்த வேண்டும் என இறுதியாக சபையில் தீர்மானிக்கப்பட்டது.
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உள்ள கழிவுகளை கொட்டுவதற்காக வைக்கப்பட்டு உள்ள தொட்டி ஒன்றினுள் உரைப்பையில் மனித மலத்தை கட்டி போட்டமை மாநகர சபை கூட்டத்தில் விசனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் விதிக்கபட்டு உள்ளன. யாழ்.மாநகர சபை கூட்டத்தில் நேற்றைய தினம் பசுமாடுகள் மற்றும் மறி ஆடுகளை இறைச்சியாக்குவோர் அவற்றுக்கு மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும். மாடு கன்று போடாது எனவும் ஆடு குட்டி போடாது எனவும் மருத்துவ சான்றிதழ் பெற்றால் மாத்திரமே அவற்றை இறைச்சியாக்கலாம் என தீர்மானிக்கப்பட்டு உள்ளது.