சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயம் மற்றும் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்றத்தை வழிநடத்திச் செல்ல முடியாவிட்டால் பதவி விலகி சுயாதீனமாக செயற்படக் கூடிய ஒருவரை நியமிக்கஇடமளிக்கவேண்டும் என பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இருக்கும் 225 உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பதே சபாநாயகரின் கடமையாக உள்ள போதிலும் கரு ஜயசூரிய ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்கும் வகையிலே செயற்பட்டு வருகின்றார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த 3 தினங்கள் ஏற்பட்டிருந்த பிரச்சினையானது சபாநாயகர் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் சுயாதீனமாக செயற்பட்டிருந்தால் ஏற்பட்டு இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.