182
ரணில் விக்கிரமசிங்கவைப் போன்றே சரத் பொன்சேகாவையும் பிரதமராக தெரிவு செய்யமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தன்னை கொலை செய்வதற்கு திட்டமிட்ட சம்பவத்தின் பின்னணியில் சரத் பொன்சேகா இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் ஒருவரை தெரிவு செய்யும் போது, அவர் ஜனாதிபதியுடன் இணைந்து போகக் கூடிய ஒருவராக இருக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Spread the love