பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் கூடியது. இன்றைய பாராளுமன்ற அமர்வில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட உள்ளது. ஐக்கிய தேசிய முன்னியினரால் குறித்த பிரேரணை கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்றையதினமும் பாராளுமன்றத்தில் பொது மக்கள் கலரியும், விசேட அதிதிகளுக்கான கலரியும் மூடப்பட்டுள்ளது. எனினும் ஊடகவியலாளர்களுக்கான கலரி மாத்திரம் திறக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவித்துள்ளன. நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வினை ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்த நிலையில், பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை முடக்கும் பிரேரணை 123 வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.