இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு வெளிப்படையான ஜனநாயக ரீதியிலான தீர்வு காணப்பட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடிகளுக்கு துரிதமாக தீர்வினைக் காணலாம் என தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்பது குறித்து சர்ச்சை காணப்படுவது உண்மை எனவும் இது தமது அரசாங்கத்தின் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையினதும் இலங்கை மக்களினதும் நட்பு நாடு என்ற வகையில் முற்றிலும் சட்டரீதியான அரசியலமைப்புக்குட்பட்ட ஜனநாயக நடைமுறைகைள மதிப்பதனை உறுதி செய்ய விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆத்துடன் அனைத்து இலங்கையர்களளினதும் முழுமையான நம்பிக்கையை கொண்ட அரசாங்கம் ஒன்று காணப்படுவதனை உறுதிசெய்ய விரும்புவதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்