ஐக்கியதேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யக்கோரி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதால், அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் எனத் தெரிவித்தே இவ்வாறு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
மேலும் குறித்த மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தங்காலிகமாக தடுக்கும் வகையில் தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும் குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்வுள்ளதாகவும சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.