ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பாராளுமன்றை கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யக்கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான விசாரணையினையின் தீர்ப்பை துரிதமாக வழங்குமாறு தாம் உத்தரவிட முடியாது எனவும் கடவுளிடம் பிரார்த்தனை மட்டுமே செய்யமுடியும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவிதி;துள்ளார்.
மேலும் அராஜக நிலையிருந்து நாட்டை மீட்டெடுக்க உயர்நீதிமன்றம் விரைவாக தீர்ப்பை வழங்கவேண்டுமெனவும் நாட்டை அராஜக நிலையிலிருந்து மீட்டெடுத்து முன்னோக்கி கொண்டு செல்ல இது மிகவும் அத்தியாவசிய தீர்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தீர்ப்பு எவ்வகையில் அமைந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தாம் தயாராகவேயுள்ளதாகவும் எனினும் தீர்ப்பு விரைவாக வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.