182
தமிழிலில் அதிகம் நடிக்கவே விரும்புவதாக நடிகை ஹன்சிகா கூறுகிறார். ஏனைய மொழிகளில் நடிப்பதை விடவும் தமிழில் நடிக்கவே அதிகம் விரும்புவதாகவும் தான் ஒரு தமிழ் பட நடிகை என்று சொல்வதில் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கி முனை திரைப்படத்தை அடுத்து, ஹன்சிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள மஹா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜமீல் என்ற புதுமுக இய்ககுனர் இயக்கும் இந்த படத்தின் சுவரொட்டிகள் (போஸ்டர்கள்) அண்மையில் வெளியாகின.
இந்திய ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் அளித்த ஹன்சிகா தாம் அடிப்படையில் புத்தரை பின்பற்றுபவர் என்றும் அன்பும் காதலும் உலகில் நிறைந்திருக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். அத்துடன் அதிகம் பயணம் செய்வதை விரும்புவதாகவும் அவர் கூறினார்.
மும்பையில் தற்போது, முதியோர் இல்லம் ஒன்றை கட்டுவதாக தெரிவித்துள்ள ஹன்சிகா, தான் தற்போது ஒரு நல்ல நிலையில் இருக்க தமிழ் சினிமாவே காரணம் என்றும் கூறியுள்ளார்.
Spread the love