Home இந்தியா 25 நாட்களாக இடம்பெற்ற பட்டாசுத் தொழிற்சாலைகளின் வேலைநிறுத்தம் வாபஸ்

25 நாட்களாக இடம்பெற்ற பட்டாசுத் தொழிற்சாலைகளின் வேலைநிறுத்தம் வாபஸ்

by admin

25 நாட்களாக மேற்கொண்டு வந்த பட்டாசுத் தொழிற்சாலைகளின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக பட்டாசுத் தொழிற்சாலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த உறுதியை ஏற்று இவ்வாறு வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் 25 நாட்களான கதவடைப்பு போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர் . இதன் காரணமாக பட்டாசு மற்றும் அதன் உபதொழிலை நம்பியிருக்கும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வந்தனர்.

பட்டாசு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல் போன்றவை நடந்து வந்த நிலையில், பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் அளிக்கப்படும் என அமைச்சர் வாக்குறுதியளித்தார்.

இதனையடுத்து வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்த தொழிற்சாலை உரிமையாளர்கள் வரும் திங்கள் முதல் பட்டாசு தொழிற்சாலைகள் வழக்கம் போல செயல்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு தீவிரமடைகிறது – ரயில் மறியல் – கைது..

Jan 19, 2018 @ 03:34


சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அவர்கள் ரயில் மறியலுக்கு முயன்றதால் பலர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் கதவடைப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த 24 நாட்களாக பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களுக்காக விருதுநகர் மற்றும் சிவகாசியில் கஞ்சி தொட்டிகள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பல கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதனால் மத்திய-மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு பட்டாசு தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சி.ஐ.டி.யூ. பட்டாசு தொழிற்சங்கம் சார்பில் திருத்தங்கல் மற்றும் சாத்தூரில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் திருத்தங்கல் ரெயில் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. நிர்வாகி பாண்டியன் தலைமையில் ஏராளமானோர் மறியல் போராட்டத்திற்கு சென்ற நிலையில் அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் பங்கேற்றனர்.

அவர்கள் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவற்துறையினர் தடுத்ததனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டம் உருவானது.  அதேவேளை அங்கு வந்த செங்கோட்டை-மதுரை இடையேயான அந்த ரெயிலை மறிக்க போராட்ட குழுவினர் முயன்றதனை தொடர்ந்து 93 பெண்கள் உள்பட 152 பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More