குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2016 ஆண்டை விடவும்; 2017ஆம் ஆண்டில் பால்நிலை தொடர்பான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இவற்றினை குறைப்பதற்கான செயற்பாடுகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள தாய் சேய் நலன் பிரிவு வைத்திய நிபுணர் கே.அச்சுதன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைக்கும் மாவட்ட மட்ட வலையமைப்பினுடைய கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, பால்நிலை வன்முறைகளைக் குறைத்தல் மாவட்ட அலகு குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், பிரதேச ரீதியான செயற்பாட்டின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.