Home இலங்கை நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலும் பாதுகாப்பில்லை என்கிறார் உப்பாலி தென்னக்கோன்…

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலும் பாதுகாப்பில்லை என்கிறார் உப்பாலி தென்னக்கோன்…

by admin

நாடுதிரும்புவதற்குரிய பாதுகாப்பான சூழல், இலங்கையில் இல்லை என சிரேஸ் ஊடகவியலாளர் உபாலி தென்னக் கோன் தெரிவித்துள்ளார். 65 வயதுடைய உபாலி தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வகின்றார்.

அமெரிக்காவில் கார்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் அவர் அடுத்த தடவை இலங்கைக்கு திரும்பும் போது தனக்கு என்ன நடக்குமென தெரியாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் இன்னும் இலங்கையில் அரசியல் அதிகாரத்தில் உள்ளதால் நாடு திரும்பக்கூடிய சூழல் தற்போது இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களும் ஊடகவியலாளர் லசந்த வை கொலை செய்தவர்களும் இன்னும் உயர் பதவிகளை வகித்து வருவதாகவும் அவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னைய மகிந்த ராஜபக்ஸக்களின் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த உபாலி தென்னக் கோன் மீது, கடந்த 2009 ஆம் ஆண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இந்தநிலையியே மீளவும் நாடு திரும்புவது பற்றி கருத்து வெளியிட்ட அவர் இலங்கையின் அரசியற் சூழல் குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மேலும் லசந்த மரணம் தொடர்பாக தான் எழுதிய கட்டுரைக்காகவே தன்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அப்போது இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா வழங்கிய தகவல்களுக்கு அமைவாகவே, தமது நிறுவன ஊடகவியலாளர் ஒருவர் செய்தி பிரசுரிக்க மறுப்பு தெரிவித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  மேலும் கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் ராஜபக்ஸ குடும்ப அரசியல் களத்தில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தன் மீதான தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தான் நாடு திரும்பக்கூடிய சூழல் தற்போது இல்லையென எனவும் உபாலி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கை சென்றிருந்த உபாலி தென்னகோன், தன்மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவராக கருதப்படும் ராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி பிரேமானந்த உதாலகமவை அடையாளம் காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More