குளோபல் தமிழச் செய்தியாளர்
தம்மை கைது செய்ய சூழ்ச்சித் திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தமக்கு எதிராக பாரியளவில் சேறு பூசும் நடவடி;ககைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் தாம் பொய்யுரைத்துள்ளதாகத் தெரிவித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றி வரும் சில அதிகாரிகள் தமக்கு எதிராக செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியையும் தம்மையும் இலக்கு வைத்து இவ்வாறு போலிப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.