187
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மஹிந்த ஆட்சி காலத்தில் உண்மையை எழுதிய பத்திரிகையாளர்கள் நடுவீதியில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டனர் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார். யாழில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று யாழ். மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும்தெரிவிக்கையில்.
நான் ஜனாதிபதியான பின்னர் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளேன். இந்த மூன்றாண்டில் காணமல் போனவர்கள் என யாரும் இல்லை. நாட்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் மஹிந்த ஆட்சி காலத்தில் இந்த நாட்டில் வடக்கு தெற்கு என எல்லா இடங்களிலும் காணாமல் போதல் அதிகரித்து காணப்பட்டது.
அதேபோல பத்திரிகைகளில் உண்மையை எழுதியவர்களை நடு வீதியில் சுட்டு படுகொலை செய்தார்கள். பத்திரிகையாளர்கள் இங்கே வாழ முடியாது என நாட்டை விட்டு வெளியேறினார்கள். முழு நாடுகளும் எங்கள் மீது கோபப்பட்டன. நாங்கள் தனிமை ஆக்கப்பட்டோம்.
நான் ஜனாதிபதியான பின்னர் உலகம் முழுவதும் சென்று நாடுகளின் தலைவர்களை சந்தித்தேன். அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரை சந்தித்தேன். அவரிடம் இந்த நாட்டில் மனித உரிமைகள் பேணப்பட வேண்டும். சுதந்திரமாக வாழ வேண்டும் அதற்கு உங்கள் ஒத்தாசைகள் தேவை என கேட்டேன்.
இன்று எமது நாட்டை உலக நாடுகள் பெருமையாக பார்க்கின்றன. இந்த மூன்று வருடங்களில் காணாமல் போனோர் என யாரும் இல்லை அரசியல் கொலை இடம்பெறவில்லை. யாரும் நாட்டை விட்டு வெளியேறவில்லை. என மேலும் தெரிவித்தார்.
Spread the love