போபர்ஸ் ஊழல் வழக்கு விசாரணை அமர்வில் இடம்பெற்றிருந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், காரணம் ஏதும் தெரிவிக்காமல் விசாரணையில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த 1986-ம் ஆண்டு ராணுவத்துக்கு பீரங்கிகள் வாங்குவதற்காக போபர்ஸ் நிறுவனத்திடம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அரசியல் கட்சி தலைவர்கள், உயர் அதிகாரிகளுக்கு 64 கோடி ரூபா லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது
இதுதொடர்பான வழக்கை விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம் போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறி குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்தது.
எனினும் குறித்த வழக்கை மறுபடியும் விசாரிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வுஇடம்பெற்று வந்தது.
இற்தநிலையில் இந்த அமர்வில் இடம்பெற்றிருந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் திடீரென விசாரணையில் இருந்து விலகியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் மார்ச் 28-ம் திகதி போபர்ஸ் ஊழல் வழக்கு விசாரணை நடைபெறும் எனவும்; இதற்கான புதிய அமர்வு அமைக்கப்படும் எனவும் வழக்கை விசாரித்து வரும் அமர்வு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது