Home சினிமா காதலர் தினத்தில் ரசிகர்களை சந்தி்த்தார் விஜய்

காதலர் தினத்தில் ரசிகர்களை சந்தி்த்தார் விஜய்

by admin


விஜய் நடித்து வரும் விஜய்யின் 62ஆவது படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வரும் நிலையில், காதலர் தினத்தன்று விஜய்யின் சண்டைக்காட்சிகள் படமாக்கபட்டது. இதன்போது விஜய் தனது ரசிகர்களை சந்தித்துள்ளார்.  ‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62ஆவது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடந்து வந்த நிலையில் படக்குழு மீண்டும் சென்னை விரைந்துள்ளது.

இதில் காதலர் தினமான நேற்று சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படப்பிடிப்பு நடைபெற்றது.. அங்கு படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்று படமாக்கபட்டது. இதில் விஜய்யுடன் நடிகை கீர்த்தி சுரேஷூம் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார்.

படப்பிடிப்பின் போது, தன்னை பார்க்க வந்த ரசிகர்களை பார்த்து கையசைக்கும் விஜய்யின் புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  இந்நிலையில், படக்குழு மீண்டும் கொல்கத்தா சென்றுள்ளது.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் தீபாவளிக்கு வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More