குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தந்தை இன ரீதியான கருத்துக்களை கூறி வாக்கு பெற, தனயன் இன ஒற்றுமை தொடர்பிலான கருத்துக்களை கூறுகின்றார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு சமஸ்டி வேண்டும். – சி.வி.
நாட்டில் உள்ள ஒன்பது மாகாணங்களிலும் சமஸ்டி முறையிலான ஆட்சி அமைக்கப்பட்டால் இனபிரச்சனைக்கு நிரந்த தீர்வினை எட்ட முடியும் என தான் நம்புவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டில் உள்ள ஒன்பது மாகாணங்களிலும் ஏன் சமஸ்டி ஆட்சி அமைக்க கூடாது என கருத்தை முன் வைத்துள்ளேன். 13ஆம் திருத்த சட்டத்தை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கொண்டு வந்த போது , ஜே.ஆர் ஜெயவர்த்தன அதனை முழு நாட்டுக்கும் ஏற்புடையதாக செய்தார். அதேபோல் ஒரு சமஸ்டி அரசியல் யாப்பை முழு நாட்டுக்கும் கொண்டு வந்தால் , என்ன என கேட்டு உள்ளேன். அது தொடர்பில் சிங்கள கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள் என்பதனை பொருத்து ஒரு நிரந்தர தீர்வை எட்ட முடியும் என நம்புகிறேன். என தெரிவித்தார்.