பலாத்காரம் உள்ளிட்ட எந்த வழக்கில் இருந்தும் நித்தியானந்தாவை விடுவிக்க முடியாது என கர்நாடக நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நித்தியானந்தவின் பிடதி ஆசிரமத்தில் அவருக்கு உதவியாளராக இருந்தவர் லெனின் என்பவர் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை நித்தியானந்தா , ஆரத்தி ராவ் என்ற பெண்ணை பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கர்நாடக நீதிமன்றில் நடைபெற்று வருகின்ற நிலையில் தாம் 5 வயது தன்மையுடன் இருப்பதாகவும் தன்னை பலாத்கார வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் ; நித்தியானந்தா மருத்துவ சான்றுடன் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரது கோரிக்கையை; நிராகரித்துள்ள நீதிமன்றம் பலாத்கார வழக்கு மட்டுமல்ல எந்த வழக்கில் இருந்தும் நித்தியானந்தாவை விடுவிக்க முடியாது எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் பெப்ரவரி 28ஆம் திகதி முதல் நித்தியானந்தா மீதான வழக்குகளின் விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிமன்றம் தெமரிவித்துள்ளது.