குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை அதிகாரியின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக ஆசியாவிற்கான பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றி வரும் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் செயற்பாடுகள் குறித்தே இவ்வாறு கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம் இவ்வாறு கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு விளக்கம் அளித்துள்ளதாகவும், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக குளோபல் தமிழ் போரம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.