சோமாலியாவின் மொகடிசு நகரில் நடத்தப்பட்ட இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொகடிசுவில் உள்ள அரசு அலுவலகங்களை குறிவைத்து நேற்று அடுத்தடுத்து இரண்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தது. இந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும், 20-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்த தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த பலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது எனவும் மேலும் காயமடைந்த 36 பேர் மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த தாக்குதல்களுக்கு அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அல்-ஷபாப்அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் மொகடிசு நகரில் அல் ஷபாப் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 500-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.