188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான டொக்டர் ராஜித சேனாரட்ன, டி.எம். சுவாமிநாதன் மற்றும் ராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்கில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து இன்று அலரி மாளிகையில் விசேட கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
Spread the love