ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயலின் தாக்கத்தினால் 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 21 பேர் போலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். எனவும் அதில் பெரும்பாலானவர்கள் வீதிகளில் உறங்குபவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலின் தெற்கு பகுதி வரை இந்த வழக்கத்திற்கு மாறான குளிர் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஏழைகள், வீடற்றவர்கள், மற்றும் குடியேற்றவாசிகள் இந்த மிகப்பெரிய பனிப்புயலால் பாதிக்கப்படுவார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முதியவர்கள், குழந்தைகள், நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் மனநிலை குறைபாடு உள்ளவர்கள் குளிர் தொடர்பான உபாதைகளுக்கு உள்ளாகும் ஆபத்து அதிகமாக காணப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிககை விடுத்துள்ளது. மேலும் இந்ந பனிப்புயல் காரணமாக நூற்றுக்கணக்கான விமானசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது