178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கண்டியில் கலவரத்தை வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் உள்ளிட்ட பத்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்களை வழிநடத்தியதாக அமித் வீரசிங்க மற்றும் சுரேந்திர சுரவீர ஆகியோர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து வீடியோ ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love