குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய அரசின் கீழ் உள்ள பாடசாலைகளை பெற்றுக்கொள்ள முனையும் நாம் , எமக்கு கீழ் உள்ள பாடசாலைகளை சரியாக நடத்தவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் வை. தவநாதன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.
அதன் போது கருத்து தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகளையும் , சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் (CSD ) கீழ் இயங்கும் முன் பள்ளிகளையும் மாகாண சபை பொறுபேற்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் மாகாண சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பாடசாலைகளை உரிய முறையில் நடத்த தவறி வருகின்றோம். பல பாடசாலைகளில் இன்றும் ஆசிரிய பற்றாக்குறை வள பற்றாகுறை என பல குறைகள் காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்தி செய்ய மாகாண சபையினால் முடியாத நிலைமை காணப்படுகின்றது என தெரிவித்தார்.