குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைபாட்டு அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 17.6 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் 8.6 மில்லியன் ரூபா பெறுமதியான சத்திர சிகிச்சை பிரிவுக்கான மருத்துவ உபகரணங்களும், 9 மில்லியன் ரூபா பெறுமதியில் வைத்தியசாலைக்கான சுற்று மதில் அமைப்பதற்குமான உதவியும் உள்ளடங்குகின்றன.
வைத்திய நிபுணர்களான தனராஜ் மற்றும் நாகேஸ்வரன் ஆகியோர் நேரடியாக தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைபாட்டு அமைச்சுடன் தொடர்புகொண்டு மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்காக அமைச்சின் செயலாளர் மற்றும் வைத்தியசாலை சமூகத்தினர் இவர்களுக்கு தங்களின் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்
இந்த நிகழ்வு இன்று (15) கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் ப.ஜெயந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைபாட்டு அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் சத்தியசீலன், பிராந்திய பிரதி சுகாதாரப் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனர்