குளோபல் தமிழ்ச் செய்தியாளர்,
ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் மீளவும் வெற்றியீட்டியுள்ளார். இதன்படி எதிர்வரும் ஆறு ஆண்டுகளுக்கு புட்டின், ரஸ்யாவின் ஜனாதிபதியாக கடமையாற்ற உள்ளார். புட்டின் இந்த தேர்தலில் 76 வீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக மத்திய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ரஸ்ய பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் அலெக்ஸல் நவால்னி ( Alexei Navalny ) தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அடைந்த அபிவிருத்தி;க்கான மக்கள் அங்கீகாரமாக இந்த வெற்றியை கருதுவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலை விடவும் இந்த தேர்தலில் புட்டினுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இணைப்பு 2 – ரஸ்யாவில் இன்று ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்
Mar 18, 2018 @ 03:31
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவில் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பதவிக்காலம் முடிய உள்ள இன்று அங்கு இன்று அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்; உட்பட எட்டு பேர் போட்டியிடுகின்றனர்.
65 வயதான புட்டின், இந்த தேர்தலில் இலகு வெற்றியீட்டுவார் என கருத்துக் கணிப்புக்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2000மாம் ஆண்டு முதல் தடவையாக ஜனாதிபதியாக தெரிவான புட்டினுக்கு இம்முறை 69 வீதமான மக்கள் ஆதரவாக வாக்களிப்பார்கள் என கருத்துக் கணிப்புக்கள் மூலம் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ரஸ்யாவில் நடைபெறவுள்ள தேர்தலில் புட்டின் வெற்றி பெறுவாரா?
Mar 16, 2018 @ 02:48
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, ரஸ்யாவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் மீளவும் போட்டியிடுகின்ற தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீது மேற்குலக நாடுகள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வரும் நிலையில், உள்நாட்டில் அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
65 வயதான புட்டின், இந்த தேர்தலில் இலகு வெற்றியீட்டுவார் என கருத்துக் கணிப்புக்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2000மாம் ஆண்டு முதல் தடவையாக ஜனாதிபதியாக தெரிவான புட்டினுக்கு இம்முறை 69 வீதமான மக்கள் ஆதரவாக வாக்களிப்பார்கள் என கருத்துக் கணிப்புக்கள் மூலம் தெரியவந்துள்ளது.