குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சார்ப் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினரால் கடந்த பதினாறு மாதக் காலத்தில் 3762 அபாயகரமான வெடிப்பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன என சார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சார்ப் நிறுவனமானது கடந்த பதினாறு மாத காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் மூன்று இலட்சத்து எழுபத்தாறாயிரத்து தொளாயிரத்து மூன்று சதுரமீற்றர் பரப்பளவில் (376,903 sqm ) இருந்து மூவாயிரத்து அறுநூற்று எழுபத்து இரண்டு (3762) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது.
இந்நிறுவனத்தில் மொத்தம் 118 பணியாளர்கள் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இதில் 11 பெண் பணியாளர்களும் அடங்குகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.