குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
Former Cuban leader Fidel Castro (L) holds up the arm of his brother, Cuba’s President Raul Castro, during the closing ceremony of the sixth Cuban Communist Party congress in Havana April 19, 2011. REUTERS/Desmond Boylanகியூபாவில் கஸ்ட்ரோக்களின் யுகம் முடிவுக்குக் கொண்டு வரப்பட உள்ளது. கியூபாவின் தற்போதைய ஜனாதிபதி ராவுல் கஸ்ட்ரோ கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆட்சி நடத்தி வருகின்றார். சகோதரர் பிடெல் கஸ்ட்ரோவிடமிருந்து ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருந்த ராவுல் கஸ்ட்ரோ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் யாரை ஜனாதிபதியாக நியமிப்பது என்பது குறித்து கியூபாவின் தேசிய பேரவை தீர்மானம் எடுக்க உள்ளது.
1959ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக கியூபாவில் கஸ்ட்ரோ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைத் தவிர்ந்த வேறும் ஒருவர் ஆட்சி பீடத்தில் அமர்த்தப்பட உள்ளார். கியூபாவின் புதிய ஜனாதிபதியாக துணை ஜனாதிபதி மிக்யுல் டியாஸ் கேனல் நியமிக்கப்படுவார் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. தேசிய பேரவை உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பு நடத்தி ஜனாதிபதியை தெரிவு செய்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.