Home இலங்கை அரசாங்கத்தை விட்டு விலகியவர்கள் மீளவும் இணைந்து கொள்ள மாட்டார்கள்…

அரசாங்கத்தை விட்டு விலகியவர்கள் மீளவும் இணைந்து கொள்ள மாட்டார்கள்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


அரசாங்கத்தை விட்டு அண்மையில் விலகியவர்கள் மீளவும் இணைந்து கொள்ளப் போவதில்லை என முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சிலர் மீளவும் இணைந்து கொள்வார்கள் என நம்பிக்கை வெளியிட்டு வருவோர் பகல் கனவு காண்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் 16 பேர் அண்மையில் அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். இந்த உறுப்பினர்கள் மீளவும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளக்கூடிய எவ்வித வாய்ப்பும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தொடர்ந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வரும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எப்பொழுது விலகுவது என்பதனை நிர்ணயம் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்தை விட்டு விலகியவர்கள் மீளவும் இணைந்து கொள்ளக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More