குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படக்கூடாது என ஜாதிக வித்வத் சங்க சபாவ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படுவதனாது நாட்டை பிளவுபடுத்தும் முனைப்பாகவே கருதப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த திருத்தச் சட்டத்தினை முன்னெடுக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அமை சுட்டிக்காட்டியுள்ளது. 13ம் திருத்தச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது ஆபத்தானது என சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் நேற்றைய தினம் இந்த அமைப்பின் மாநாடும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது