குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
2025ம் ஆண்டு வரையில் தேர்தல் நடத்தாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஜே.வி.பி இருபதாம் திருத்தச் சடத்தினை கொண்டு வருவது உள்நோக்கிலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்து தேர்தலை காலம் தாழ்த்தும் சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்த அரசாங்கம் சூழ்ச்சி திட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.